உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதியின் செயற்பாடு 19வது அரசியலமைப்புக்கு எதிரானது- பிரதமர்

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியமையை அடுத்து மூன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை அரசியல் அமைப்புக்கு முரணானவை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள் பதவிவிலகியமையை அடுத்து அவர்களுக்கு பதிலாக ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்கிரம மற்றும் ரஞ்சித் மத்துபண்டார ஆகியோரை பதில் அமைச்சர்களாக நியமிக்குமாறு ரணில் விக்கிரமசிங்க கோரியிருந்தார்

எனினும் பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி பதில் அமைச்சர்களாக நியமித்துள்ளார்.

இது நாடாளுமன்ற சம்பிரதாயத்தை மீறும் செயல் என்று ரணில் விக்கிரமசிங்க, மைத்ரிபால சிறிசேனவுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க