தவ்ஹீத் ஜமாத்தின் தமிழ்நாட்டுத் தலைவரான பி.ஜே. சேனுலாப்தீன் என்பவரை தொடர்ந்தும் ஸ்ரீலங்காவிற்குள் அனுமதிக்காமலிருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேல் மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்த அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்றைய தினம் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி சாட்சியமளித்தார்.
1995ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் அவர் இலங்கைக்கு வந்திருந்ததாகவும், அவரை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் 4 தடவைகள் தமிழ்நாட்டிலிருந்து இலங்கை வர குடியல்வுத் திணைக்களத்திற்கு பி.ஜே. சேனுலாப்தீன் விண்ணப்பம் செய்திருந்ததாகவும் அந்த விண்ணப்பங்களை தாமே இடைநிறுத்தியதாகவும் அசாத் சாலி கூறினார்.
அவரை இலங்கைக்குள் அனுமதித்தால் ஒட்டுமொத்த நாட்டையும் தீ வைத்து கொளுத்திவிடுவார் என்றும் அசாத் சாலி குறிப்பிட்டார்.
பி.ஜே. சேனுலாப்தீன் என்பவர் புனித குர்-ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்ப்பு செய்து அதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் அதேபோல முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கும் அவர்களது சகாக்களுக்கும் வழங்கியிருந்தார்.
ஏன் அவர்களிடம் வழங்கினார் என்றும், அவர்களுக்குஉரிய தொடர்பினையும் அசாத் சாலி சந்தேகம் எழுப்பினார்.

கருத்து தெரிவிக்க