ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் செய்சா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கோட்டாபய ராஜபக்ஷவே எமது முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் எனவும் அதற்கு பேச்சுவார்த்தைகள் நடத்தத் தேவையில்லையெனவும், அவர் எமது கட்சியின் பலமான வேட்பாளர் என்றும் அவருக்கு சிறந்த வேலைத் திட்டக் கொள்கைகளும் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஐந்தாவது கட்டப் பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளர் எனவும், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் எனவும் கூறியிருந்ததாக பொதுஜன முன்னணி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க