உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 13-வது லீக் போட்டி தொடங்கியது.
இதில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.
நியூசிலாந்து அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷையும் தோற்கடித்து வலுவான நிலையில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடமும், 2-வது ஆட்டத்தில் 34 ரன் வித்தியாசத்தில் இலங்கையிடமும் தோல்வி கண்டது.
நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நியூசிலாந்து அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர அதிக ஆர்வம் காட்டும். ஆப்கானிஸ்தான் அணி வெற்றி கணக்கை தொடங்க போராடும். நியூசிலாந்து அணியின் சவாலை சமாளிக்க ஆப்கானிஸ்தான் சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து தெரிவிக்க