வடக்கு செய்திகள்

முல்லைத்தீவு-தேவிபுரத்தில் வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் போரில் கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர் ஒருவர் நேற்று முன்தினம் தனது காணியில் உள்ள கிணற்றினை இறைக்கும் போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள படைமுகாமிற்கு தகவல் கொடுக்கப்பட்டு குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டவற்றில் கைக்குண்டுகள் இரண்டும்,ஆர்.பி.ஜி.குண்டு ஒன்றும், துப்பாக்கி ரவைகள் மற்றும் இரும்பு பொருட்கள் என்பன இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது
.

கருத்து தெரிவிக்க