ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் சனிக்கிழமை 8ஆம் திகதியன்று அறிவிக்கப்படவுள்ளார்.
ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி இன்று அநுரதப்புரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து இதனை தெரிவித்தார்.
இவர் இந்த தகவலை வெளியிட்ட நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் பங்கேற்றிருந்தார்.
ஊடக தகவல்களின்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக மைத்ரிபால சிறிசேனவை பரிந்துரைக்கவிருக்கிறது.
இந்தநிலையில் பிரதமர் பதவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வழங்கப்படவுள்ளது.
இதேவேளை பிரதமர் ரணிலைப்பற்றி கருத்துக்களை வெளியிட்ட அவர் ரணில் விக்கிரமசிங்க தம்மை பொறுத்தவரையில் ஒரு கடவுள் என்றும் வெதாராச்சி குறி;ப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க