இந்தியா

அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டும் பணி

அயோத்தி:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி புதன்கிழமை(நாளை) தொடங்குகிறது. அடிக்கல் நாட்டுவதற்கு அடையாளமாக முதல் செங்கல் எடுத்து வைக்கப்பட உள்ளதாக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த ஆண்டு நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்படும் என்று ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை கூறியிருந்தது. முன்னதாக பூமி பூஜை நடந்து முடிந்துவிட்டது.

இந்நிலையில் நாளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி புதன்கிழமை(நாளை) தொடங்குவதாக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை செய்தித்தொடர்பாளர் மகந்த் கமல் நயன்தாஸ் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ராமஜென்மபூமி இடத்தில் சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம் என்ற சிறப்பு பிரார்த்தனை, காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இலங்கை மீது படையெடுப்பதற்கு முன்பு, சிவனை ராமர் வழிபட்டதை பின்பற்றி, இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்பட உள்ளது. இதர அர்ச்சகர்களும் இந்த சடங்குகளை நடத்துகின்றனர். பின்னர், அடிக்கல் நாட்டுவதற்கு அடையாளமாக முதல் செங்கல் எடுத்து வைக்கப்படும்” என்றார்.

கருத்து தெரிவிக்க