அமைச்சர் ரிசாத் பதியுதீன், ஆளுநர்களான எம்எல்ஏஎம் ஹி;ஸ்புல்லாஹ் மற்றும் அசாத் ஷாலி ஆகியோரை பதவிவிலகுமாறோ அல்லது அது தொடர்பாக ஆலோசிக்குமாறோ இதுவரை ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ அறிவுறுத்தவில்லை.
இந்த செய்தி குறித்த மூவரின் தரப்பில் இருந்து பெறப்பட்டது.
தம்மைப்பொறுத்தவரையில் ஐக்கிய தேசியக்கட்சியின் 96 வீத நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன்; பதவிவிலகவேண்டும் என்று கேட்கவில்லை.
சஜித் பிரேமதாஸ தரப்பு தற்போதுதான் இந்தப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தவருகிறது.
இந்தநிலையில் அத்துரலியே ரத்தன தேரரின் உணவுத்தவிர்ப்பு விடயத்துடன் பார்க்கும்போது நாட்டில் ஒரு வன்முறை தூண்டப்படலாம் என்ற நிலை வருமானால், அத்துடன் அது தொடர்பில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ வலியுறுத்தினால், தாம் பதவிவிலகத்தயார் என்ற விடயத்தை ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
எனினும் தீவிரவாதிகளுடன் எந்த தொடர்பையும் கொண்டிருக்காத தம்மை பொய்யான குற்றம் சுமத்தி பலவந்தமாக நீக்குவதற்கு தாம் உடன்படப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
.
இதேவேளை நாட்டில் முஸ்லிம் மக்கள் விடயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க