உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை பார்வையிட பொதுமக்களும் அனுமதிக்கப்படவேண்டும் என்று ட்ரான்பேரன்ஸி இன்டர்நெசனல் கோரிக்கை விடுத்துள்ளது.
ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேகர இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஏற்கனவே இந்த விசாரணைகளை எதிர்க்கட்சி விமர்சித்து வருகிறது.
ஊடகங்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ள இந்த விசாரணைகளின் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சி குற்றம் சுமத்தி வருகிறது.
எனினும் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகமான சாட்சியங்களை இந்த விசாரணையின்போது பகிரங்கப்படுத்தவேண்டாம் என்று சாட்சியாளர்களிடம் கோரியுள்ளதாக நாடாளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையிலேயே ஊடகங்களுக்கு மாத்திரம் அல்ல. பொதுமக்களும் இந்த விசாரணைகளை பார்வையிடவேண்டும் என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெசனல் வலியுறுத்தியுள்ளது.
கருத்து தெரிவிக்க