உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ரிஷாட்டை பதவி துறக்குமாறு அரசிற்குள் அழுத்தம்

அமைச்சர் ரிஷாட் பதியூதீனை பதவி துறக்குமாறு அரச தரப்பில் பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அழுத்தமானது எதிர்வரும் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கருத்தின் அடிப்படையிலேயே இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் சூழ்நிலையின் காரணமாக நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தமது பதவியிலிருந்து விலகிக் கொள்வார் என அரசில் அங்கம் வகிக்கும் அவருக்கு நெருக்கமானவர்களிடமிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த யோசனையானது எதிர்வரும் 18-19 ஆகிய இரு தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. தற்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, நேரடியாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னிலை உறுப்பினர்கள் சிலரும் சார்பாக அல்லது வாக்களிப்பில் விலகிக் கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசுடன் இணைந்துள்ள ஜாதிக்க ஹெலஉருமய கட்சியும் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த வாக்களிப்பு முக்கியமான திருப்புமுனையாக இருக்குமென தெரிவித்து அமைச்சர் ரிஷாட் பதியூதீனை விசாரணைகளுக்கு இடமளித்து விலகுமாறு அரச தரப்பிலுள்ள முக்கிய அமைச்சர்கள் கோரியுள்ளனர். எனினும் அவர் இதுவரை உறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னிலை உறுப்பினர்களுக்கு தமது பக்கமுள்ள நியாயத்தை  ரிஷாட் தெளிவுபடுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு முன்னர் அவர் தமது பதவியிலிருந்து விலகுவார் என அரச தரப்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க