குருணாகலை வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் சாஃபி சஹப்தீன் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் வேட்பாளர் ஒருவராவார்.
அத்துடன் சிறி கொத்தவின் செயற்பாடுகளுக்கு நிதியளித்தவர் என்பதுடன் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணையானது வெறும் கண் துடைப்பு நாடகமே என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
சாஃபியின் கருத்தடை சிகிச்சை யுத்தத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தாய்மார்களுக்கு நியாயம் கிடைக்குமாயின் அது வைத்திய நிர்வாகக் குழுவினாலும் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள சுயாதீன ஆணைக்குழுவாலுமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் வைத்தியர் சாஃபியினால் பாதிக்கப்பட்டதாகக் கூறி முறைப்பாடு செய்யவந்த தாய்மார்களுடன் உரையாடிய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை இன்று தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க