அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள தெளிவான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டுமென கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தீவிரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் காணி, சொத்துக்கள், நிதி மற்றும் பாதுகாப்பு வழங்கி உதவிய இந்த நாட்டிலுள்ள மேல்மட்ட தலைவர்களின் தகவல்களை சாட்சிகளோடு பெயர் ஊர் விபரங்களுடன் வெளியிடவுள்ளதாகவும் அந்த தகவல்கள் ரத்தன தேரரின் ஊடாக மௌத்த பீட மகா சங்கத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரத்தன தேரரின் இந்த செயற்பாடானது நாட்டிற்குள் உலாவும் மேல்மட்ட பொறுப்புக்களை வகிக்கும் ஏனைய குற்றம் இழைக்கப்பட்டவர்களை நாட்டிற்கு அடையாளம் காட்டுவதற்கான நடவடிக்கையின் முன்னுதாரணமாக அமைவதுடன், அவர் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு தாம் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க