பிரெஞ்ச திறந்தநிலை டென்னிஸ் போட்டியில் முன்னிலை வீரர் ரொஜர் பெடரர் தனது முதல் சுற்றில் இலகுவாக வெற்றி பெற்றார்.
கெர்பர், மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் திறந்தநிலை டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நேற்று ஆரம்பமானது.
‘களிமண் தரை’ போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர், இத்தாலியின் லோரென்ஜா சோனிகோவை (இத்தாலி) எதிர்த்தாடினார்;.
ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற ஒரே இந்தியரான சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தனது முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.
முன்னாள் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 3-6, 3-6 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவிடம் (உக்ரைன்) தோல்வியடைந்தார்.
கருத்து தெரிவிக்க