இந்திய அரசுடன் பேச்சு நடத்த தயாராக உள்ளோம்,” என பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீரின், புல்வாமாவில், பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த, 40 பேர் கொல்லப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, பாக்., எல்லைக்குள் சென்று, அங்குள்ள பயங்கரவாதிகள் முகாம்களை, நமது விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையேயான உறவு மோசமான நிலையில் உள்ளது.
இந்த நிலையில் இந்திய அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க