கிழக்கு மாகாணத்தில் கடந்த 6 திகதி முதல் இடமாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்கள் மீண்டும் தமது நிரந்தர நியமன இடங்களில் பணிகளுக்காக சமுகமளிக்கவேண்டும் என்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதங்கள் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரால் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இதன்படி கடந்த 6ஆம் திகதி முதல் தம்மால் வழங்கப்பட்ட தற்காலிக இடமாற்றங்கள் ரத்துச்செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிரந்தர பணி இடங்களுக்கு திரும்பாதுபோனால் அந்த நாட்கள்,வேதனமற்ற விடுமுறையாக கருதப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க