இலங்கைக்கான சுற்றுலா தொடர்பாக தமது நாட்டு பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண அறிவுறுத்தல்களை விலக்கிக்கொள்ள இன்னும் அவகாசம் தேவைப்படுவதாக வெளிநாடுகளின் ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையி;ல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. வெளிநாட்டு ராஜதந்;திரிகளை சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினார்.
43 நாடுகளின் ராஜதந்திரிகள் இந்த சந்திப்பின்போது பங்கேற்றனர்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்படும் கைதுகள் உட்பட்ட நிலைமைகளை தொடர்ந்தும் அவதானித்துக்கொண்டிருப்பதாக ராஜதந்திரிகள் இதன்போது குறிப்பிட்டனர்.
இந்த நிகழ்வின்போது தகவல் தந்த இலங்கையின் புலனாய்வுப்பிரிவு அதிகாரி ஒருவர், தீவிரவாதிகளின் முக்கியமான ஒருவர் சவூதிக்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தநிலையில் அவரை கைதுசெய்ய சவூதியின் உதவி கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
உயி;ர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பின்னர், அமரிக்கா, பிரித்தானியா, கனடா அவுஸ்திரேலியா, ஜப்பான்,இந்தியா, சீனா,உட்பட்ட நாடுகள். தமது பிரஜைகள் இலங்கைக்கான அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க