இன்று (பெப்ரவரி 20) யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த சந்தேக நபரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க