நேற்று (பெப்ரவரி 17) யாழ் வட்டுக்கோட்டை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் 55 வயதுடைய சந்தேக நபரொருவர் கோடாவுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதற்கிணங்க கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதோடு இன்று (பெப்ரவரி 18) குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க