இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வடமாகாண ஆளுநருக்கும் நியூசிலாந்துத் தூதுவருக்குமிடையே சந்திப்பு

நேற்று (ஜனவரி 28) வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநருக்கும் நியூசிலாந்துத் தூதுவர் தலைமையிலான குழுவினருக்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க குறித்த சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான நியூசிலாந்துத் தூதுவர் டேவிட் பின்னியிடம் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வடமாகாண மக்களை பாரபட்சமாக நடத்தாதென்றும் அரசாங்கத்தின் காலத்தில் தமக்கான நீதியைப் பெற்றுக் கொள்ள முடியுமென்றும் வடமாகாண மக்கள் நம்புகின்றனரென தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கை மற்றும் மாலைதீவிற்கான நியூசிலாந்துத் தூதுவர் வடமாகாண ஆளுநரிடம் வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார மேம்பாடு தொடர்பிலும் குறிப்பாக சுற்றுலாத்துறை தொடர்பிலும் கேட்டறிந்துக் கொண்டாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க