புதியவைவணிக செய்திகள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

எதிர்வரும் ஜனவரி 08ம் திகதி 102,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அதற்கிணங்க 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் வழங்கப்படவுள்ளன.

அத்தோடு 364 நாட்கள் கொண்ட 42,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க