புதியவைவணிக செய்திகள்

அஸ்வெசும நிலுவைத்தொகை தொடர்பில் விசேட அறிவிப்பு

அஸ்வெசும பயனாளர் குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இன்று (டிசம்பர் 27) முதல் உரிய வங்கிக் கணக்குகள் மூலம் பெற்றுக்கொள்ளலாமென நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக தகுதி பெற்ற 212,423 குடும்பங்களுக்கான நிலுவைத்தொகை ரூபாய் 1,314,007,750 பணத்தை வங்கியில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க