கடந்த பொதுத் தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (நவம்பர் 20) பதுளை காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஹரின் பெர்னாண்டோவிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் இன்று (நவம்பர் 20) கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஹரின் பெர்னாண்டோவை இன்றைய தினமே பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க