தற்போது நாட்டில் அரச நிர்வாக சேவைகளில் நிலவும் வெற்றிடங்கள் குறித்து பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சு கருத்து தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க நாட்டில் பொது நிர்வாக சேவை மற்றும் கணக்காய்வு சேவைகளில் 1200ற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதாகவும் பொறியியல் துறையில் 250ற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் நிலவுவதாகவும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பை துரிதகதியில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க