நாட்டில் நிலவும் பொருளாதார நிலை, வாழ்க்கை செலவு மற்றும் தொழிலாளர்களின் குறைந்த கொள்வனவு திறன் என்பவற்றை கருத்திற்கொண்டு அரச பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தீபாவளி முற்பணத்தை 10,000 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க கடந்த 10 வருடங்களாக அரச பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட 10,000 ரூபாய் தீபாவளி முற்பணம் இம்முறை 10,000 அதிகரிக்கப்பட்டு 20,000 ரூபாவாக வழங்க தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் பி.கே.பிரபாத் சந்திர தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க