புதியவைவணிக செய்திகள்

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி

இந்தியாவிலிருந்து 03 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவை இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையுமென இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க முட்டை கொள்முதல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் முட்டை இறக்குமதிக்கான விண்ணப்பங்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் இறக்குமதி செய்யப்படும் முட்டை 40 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க