புதியவைவிளையாட்டு செய்திகள்

இன்று ஆசிய கிண்ண டி20 மகளிர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்!

இன்று (19) ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் ஆசிய கிண்ண டி20 மகளிர் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளதுடன் அனைத்து போட்டிகளையும் விளையாட்டு ரசிகர்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இன்று முதல் நாளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் நேபாளத்திற்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளும் மோதவுள்ளன.

மேலும், நாளை (20) இலங்கை மகளிர் அணி ஆரம்ப சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க