1977ம் ஆண்டு மது நடிப்பில் வெளியான “தீரசாமிரே யமுனா தீரே” படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான அரோமா மணி (எம்.மணி) நேற்று(ஜூலை 14) தனது 65வது வயதில் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
இவர் அரோமா மணி, அரோமா மூவீஸ் மற்றும் சுனிதா புரொடக்சன்ஸ் ஆகியவற்றின் கீழ் 60 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார்.மேலும்
இவரின் தயாரிப்பில் வெளிவந்த ‘திங்கலஞ்ச நல்ல தெய்வம்’, தூரே தூரே ஒரு கூடு கூட்டம்’ போன்ற படங்கள் இவருக்கு தேசிய விருதுகளை பெற்றுத்தந்த திரைப்படங்களாகும்.
அத்தோடு 2013ல் இவரின் தயாரிப்பில் வெளிவந்த ‘ஆர்ட்டிஸ்ட்’ திரைபடமே அரோமா மணியின் கடைசி திரைப்படமாகும்.
தற்போது அரோமா மணியின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க