சினிமாசினிமாபுதியவை

பிலிம்பேர் விருதுகளை தன்வசப்படுத்திய 2022ம் ஆண்டில் வெளிவந்த 03 படங்கள்

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர்,நடிகைகள் மற்றும் சிறந்த படங்களை கௌரவிக்கும் முகமாக பிலிம்பேர் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன.

அதனடிப்படையில் கடந்த ஜூலை 11ம் திகதி பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றிருந்தது.இதில் 2022 ம் ஆண்டு வெளியான 03 படங்கள் பிலிம்பேர் விருதுகளை தன்வசப்படுத்திக்கொண்டன.

அதற்கிணங்க ராம் சரண் மற்றும் ஜீனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் 07 விருதுகளையும் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளிவந்த காந்தாரா திரைப்படம் 07 விருதுகளையும் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த சீதா ராமன் திரைப்படம் 05 விருதுகளையும் தன்வசப்படுத்திக்கொண்டன.

கருத்து தெரிவிக்க