நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். இதைத் தொடர்ந்து நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும் புதிய கூட்டணி அரசில் கே.பி.சர்மா ஒலி பிரதமராக பொறுப்பேற்பாரென தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (ஜூலை 12) நேபாளத்தில் ஐந்தாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் பிரசந்தா பாராளுமன்ற செயலகத்திற்கு கடிதம் எழுதியிருந்ததோடு நேபாள பிரதிநிதிகள் சபையில் நேற்று (ஜூலை 12) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.குறித்த வாக்கெடுப்பில் பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா 63 ஆதரவான வாக்குகளையும் எதிராக 194 வாக்குகளையும்
பெற்று தோல்வியடைந்திருந்தார்.
அதற்கிணங்க நேபாள காங்கிரஸ் சார்பில் அமையும் புதிய கூட்டணி அரசில் கே.பி.சர்மா ஒலி பிரதமராக பொறுப்பேற்பாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க