புதியவைவிளையாட்டு செய்திகள்

மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி!

இன்று பார்படாஸ் நகரில் உள்ள கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் T20 உலகக்கிண்ணத் தொடரில் இடம்பெற்ற சூப்பர் 8 போட்டியில் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 9 விக்கெட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்க அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதன்படி, 129 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 10.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

கருத்து தெரிவிக்க