நாத்தாண்டியா பிரதேசத்திலுள்ள பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பட்டதாரி ஆசிரியர் நியமனம் குறித்து கருத்து தெரிவித்தார்.
அதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் 2300 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்நியமனங்கள் கணிதம்,இரசாயனவியல்,பௌதீகவியல், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க