உருளைக்கிழங்கை வைத்து பல விதங்களில் நம்முடைய முகத்தை பொலிவாகவும் அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும்.
அந்தவகையில், உருளைக்கிழங்கின் தோலை நீக்கி பின்னர் பொடியாக நறுக்கி அதனை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதில் கஸ்தூரி மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கலந்து ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து விடுங்கள்.
தினமும் காலையில் எழுந்ததும் ஒரே ஒரு ஐஸ்க்யூபை மட்டும் எடுத்து நம்முடைய முகத்தில் நாம் நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள் நீங்கி முக துவாரங்கள் இறுகி இளமையான தோற்றத்தை தரும்.
கருத்து தெரிவிக்க