நேற்றிரவு நடைபெற்ற இந்தியன் பிறீமியர் லீக்கில், லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் மற்றும் சண்றைசர்ஸ் ஹைதரபாத் இடையிலான போட்டியில்,
நாணயச் சுழற்சியில் வென்ற லக்னோவின் அணித்தலைவர் லோகேஷ் ராகுல் தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ ஆரம்பத்திலேயே குயின்டன் டி கொக், மார்க்கஸ் ஸ்டொய்னிஸை புவ்னேஷ்வர் குமாரிடம் இழந்தது.
அதன்பின்னர்,நிக்கலஸ் பூரானின் ஆட்டமிழக்காத 48 (26), ஆயுஷ் படோனியின் ஆட்டமிழக்காத 55 (30) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு 166 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிய சண்றைசர்ஸ், ட்ரெவிஸ் ஹெட்டின் ஆட்டமிழக்காத 89 (30), நடராஜனுக்குப் பதிலாக தாக்கம் செலுத்தும் மாற்றுவீரராகக் களமிறங்கிய அபிஷேக் ஷர்மாவின் ஆட்டமிழக்காத 79 (28) ஓட்டங்களோடு 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது.
கருத்து தெரிவிக்க