புதியவைவிளையாட்டு செய்திகள்

தென்னாபிரிக்க மகளிர் அணி மற்றும் சுற்றுலா இலங்கை மகளிர் அணி இடையில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர்!!

தென்னாபிரிக்கா மகளிர் அணி மற்றும் சுற்றுலா இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான நேற்று (17.04) நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்று இரண்டுக்கு ஒன்று என்ற அணிப்படையில் கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணி சார்பில் லோரா வோல்வர்ட் ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் மற்றும் 26 பவுண்டரிகள் அடங்களாக 195 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

கருத்து தெரிவிக்க