நேற்று(26.03) சிங்கப்பூரில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்டு வந்த கப்பல் ஒன்று அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்காட் பாலம் மீது மோதி உடைந்த நிலையில், ஆற்றில் விழுந்தவர்களை மீட்பதற்காகவும், இந்த விபத்து குறித்து விசாரிப்பதற்காகவும் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ளது பல்டிமோர் நகரம். இங்கு பாயும் படப்ஸ்கோ என்ற ராட்சத ஆற்றுக்கு மேலே பிரம்மாண்டமான பிரான்சிஸ் ஸ்காட் (Francis Scott) என அழைக்கப்படும் பாலம் அமைக்கப்பட்டிருந்தது.
இதில், அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கார்கள் ஆற்றுக்குள் விழுந்தன. தகவல் அறிந்த பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,அதில் இருந்த மாலுமிகள் உள்பட அனைத்து பணியாளர்களும் இந்தியர்கள் ஆவர்.
கருத்து தெரிவிக்க