தேசியத் தேர்தல் எதிர்வருவதைத் தொடர்ந்து அரச சொத்துக்களை விற்பதை நிறுத்துமாறு நேற்றைய தினம் (12.03) அரசாங்கத்தை வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்குமென்பதால் அரச சொத்துக்களை வாங்குவதில் ஆர்வமுள்ள தரப்பினர் தமது முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு எச்சரித்துள்ளது.
அரச வளங்களையோ, அரச நிறுவனங்களையோ அல்லது நிறுவனங்களையோ விற்க அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், பெரும் தரகுப்பணத்தை பெறுவதற்காக இத்தகைய சொத்துக்களை அவசரமாக விற்கும் திட்டங்களை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்றும் தேசிய மக்கள் சக்தி பொருளாதார உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க