கடந்த திங்களன்று (04.03) பாகிஸ்தானின் புதிய பிரதமராக இரண்டாவது முறையாகவும் ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்றார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் மாத்யூ மில்லர், “இந்திய பிரதமரின் வாழ்த்து அறிக்கையை நாங்கள் நிச்சயமாக வரவேற்கிறோம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனான தனது உறவை அமெரிக்கா மதிக்கிறது. அவ்விரு நாடுகளும் பயனுள்ள மற்றும் அமைதியான உறவைக் கொண்டிருப்பதை பாா்க்க நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆக்கபூா்வமான பேச்சுவாா்த்தைகளை நாங்கள் வரவேற்போம்.
ஆனால், பேச்சுவாா்த்தைகளின் வேகம், நோக்கம் மற்றும் தன்மை ஆகியவை இந்தியாவும் பாகிஸ்தானும் தீா்மானிக்க வேண்டிய விடயம்” என தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க