சிறப்பு செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

உலகின் நீளமான மிகப்பெரிய அனகொண்டா பாம்பின் வீடியோவை வெளியிட்ட விஞ்ஞானி Freek Vonk

உலகின் மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாக அமேசான் மலைக்காடுகள் திகழ்கின்றனஇங்கு விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தி வரும் நிலையில், மிகப்பெரிய அனகொண்டா பாம்பின் வீடியோ ஒன்றை ஆராய்ச்சியாளர் ஒருவர் வௌியிட்டுள்ளார்.

அமேசான் காட்டில் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் Freek Vonk நீருக்கு அடியில் இருக்கும் 26 அடி நீளமான மிகப்பெரிய அனகொண்டா பாம்பின் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

”நான் பார்த்த மிகப்பெரிய அனகொண்டாவை வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். ஒரு கார் டயர் போன்ற பருமன், சுமார் 8 மீட்டர் நீளம் மற்றும் 200 கிலோவிற்கு மேல் எடை, பெரிய தலையுடன் இது காணப்படுகிறது. நான் இதற்கு முன்பு ஒரு பெரிய இனத்தை கண்டுபிடித்தேன். அது அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு சிறிய பாம்பு. ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகிலேயே மிகப்பெரிய பாம்பு,”என பேராசிரியர் Freek Vonk தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வகை பாம்பினத்திற்கு இலத்தீனில் Eunectes Akayima என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு வடக்கு பச்சை அனகொண்டா (northern green anaconda) என அர்த்தம்.

கருத்து தெரிவிக்க