வெளிநாட்டு செய்திகள்

நியூசிலாந்தின் 170 ஆண்டு வரலாற்றில் இளம்பெண் MPயின் அதிரடி பேச்சு

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மௌரி பழங்குடியின பெண் எம்பி மை பி கிளாக், தங்களின் பாரம்பரிய வெற்றி முழகத்தை முழங்கிவிட்டு உரையாற்றினார். அதனை அங்கிருந்து எம்பிக்கள் மகிழ்ச்சியுடனும், ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தனர். அந்த முழக்கம் உலகம் முழுவதும் பெரிய அளவில் வைரலாகி, காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளளது. நியூசிலாந்து நாட்டின் மௌரி பழங்குடி பெண் எம்பியான மை பி கிளார்க் நாடாளுமன்றத்தில் முழக்கமிட்ட வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. நியூசிலாந்தை பொறுத்தவரை ஹக்கா நடனம், நியூசிலாந்து மௌரி பழங்குடியினரின் ஆதி பழக்கங்களில் ஒன்று, போர்,வெற்றி,ஒற்றுமை,இன குழுவின் பெருமை என எல்லாவற்றையும் சொல்ல பயன்படுத்தபடும் முறையாகும். அந்த பழங்குடியினரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வயது எம்பியான மை பி கிளாக் வெற்றி முழக்கமிட்டு, தனது உரையை பேசி, அந்த நாடாளுமன்றத்தையே அதிர வைத்துள்ளார்.

 

மைபி கிளாக் யார் என்று நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் தேடி வருகிறார்கள். மை பி கிளாக் எம்பி திடீர் அரசியல்வாதி அல்ல. அரசியல் அவரது ரத்தத்திலேயே ஊறி உள்ளது. அவரது தாத்தா வயர்மு கட்டேனே நியூசிலாந்தின் மௌரி பகுதியின் முதல்வராக இருந்தார். அவரது அத்தை ஹனா தே ஹேமாரா நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். ஹாமில்டனின் நடந்த அடிமைத்தனம் மற்றும் மாவோரி பழங்குடியினர் மீது நடந்த அடக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர்கள் ஆவார். மை பி-கிளார்க் தன்னை ஒரு அரசியல்வாதியாக நினைக்கவில்லை, மாறாக மவோரி மொழி, நிலம் மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை பாதுகாக்கும் பாதுகாவலனாக நினைத்து செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி அடக்குமுறைகளை சந்தித்த இனமான மவோரிகளிடம் இருந்து வந்துள்ள இவர், மாவோரியின் குரல்களைக் கேட்க வேண்டிய நேரம் இது என்று உறுதியாக நம்புகிறார்.மைபி-கிளார்க்கை இன்ஸ்டாகிராமில் 20,000 பின்தொடர்பவர்களும், டிக்டோக்கில் 18,500 பின்தொடர்பவர்களும் இருக்கிறார்கள். மை பி-கிளார்க் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். மண்ணும் மலையும் எங்கள் பரம்பரைக்கே சாமியாடா என்ற பாணியில் நியூசிலாந்தின் 21 வயது எம்பியான மை பி-கிளார்க் குரல் இப்போது சமூக ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கிறது.

கருத்து தெரிவிக்க