விளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இலங்கை – ஸிம்பாப்வே கிரிக்கெட் தொடருக்கான உள்நாட்டு ஒளிபரப்பு!

இலங்கையுடான சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்கவுள்ள ஸிம்பாப்வே குழாம் நேற்று (04) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்தது.

இலங்கை மற்றும் ஸிம்பாப்வே அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதுடன் தொடரின் சகல போட்டிகளும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இரண்டு அணிகளுக்குமிடையிலான முதல் சர்வதேச ஒருநாள் போட்டி நாளை (06) நடைபெறவுள்ளது.
இலங்கை – ஸிம்பாப்வே கிரிக்கெட் தொடருக்கான உள்நாட்டு ஒளிபரப்பு உரிமத்தை MTV செனல் தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.
தொடரின் சகல போட்டிகளையும் TV 1 தொலைக்காட்சியில் பார்வையிட முடியும்.

கருத்து தெரிவிக்க