உலகம்வெளிநாட்டு செய்திகள்

தன் மீதான தடை உத்தரவை இரத்து செய்ய கோரும் டொனால்ட் ட்ரம்ப்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தடை விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பை இரத்து செய்ய கோரி, டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தடை விதித்தது.
அரசியலமைப்பின் கிளர்ச்சி என்ற வாக்கியத்தை குறிப்பிட்டுக்காட்டி,  ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் பொருத்தமான வேட்பாளர் அல்லவென நீதிமன்றம் அறிவித்திருந்தது.
அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

கருத்து தெரிவிக்க