இந்த பதிவில் 27 நட்சத்திரங்களில் திருவோணம் முதல் ரேவதி வரையான நட்சத்திரங்களின் பொதுப்பலன்களை காணலாம்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- பலனை எதிர்பாராமல் உதவக்கூடியவர்கள்.
- மற்றவர்களின் பிழைகளை சுட்டிக்காட்டி திருத்தும் இயல்பு உடையவர்கள்.
- தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு உடையவர்கள்.
- பெரியவர்களிடத்தில் மரியாதை கொண்டவர்கள்.
- பொது விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்பவர்கள்.
- நிலபுலன்கலை கொண்டவர்கள்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவராக இருப்பார்கள்.
- பலனை எதிர்பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர்கள்.
- ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள்.
- பெற்றோர் மீது அன்பு கொண்டவர்கள்.
- அழகான தோற்றம் உடையவர்கள்.
- புத்திக்கூர்மை உடையவர்கள்.
- செல்வமும், செல்வாக்கும் உடையவர்கள்.
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த நாட்டம் கொண்டவர்கள்.
- எளிதில் மற்றவர்களை கவரக் கூடியவர்கள்.
- மகிழ்ச்சியான மனநிலையை உடையவர்கள்.
- நெருங்கியவர்களுக்கு இனியவர்கள்.
- ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள்.
- நன்கு சிந்தித்து பின்பு செயல்படுவார்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- அழகான மற்றும் சாதுரியமான பேச்சுகளால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.
- எதிர்கால திட்டங்களில் மிகுந்த கவனம் கொண்டவர்கள்.
- எதிர்கால தேவைகளுக்கான சேமிப்பில் விருப்பம் உள்ளவர்கள்.
- வெற்றிக்காக கடுமையாக போரடக்கூடியவர்கள்.
- எளிதில் எல்லோரிடமும் பழகக்கூடியவர்கள்.
- செய்தொழில் மிகுந்த ஈடுபாடுடன் செயல்படக் கூடியவர்கள்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- உடல் ஆரோக்கிய விஷயங்களில் மிகுந்த கவனம் கொண்டவர்கள்.
- எந்த சூழ்நிலையையும் சமாளிக்க கூடியவர்கள்.
- பிறரிடம் நேர்மையையும், உண்மைமயயும் எதிர்பார்க்க கூடியவர்கள்.
- கலைளில் விருப்பம் கொண்டவர்கள்.
- பயணங்களில் விருப்பம் உடையவர்கள்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்:
- நெடுந்தூர பயணங்களில் விருப்பம் கொண்டவர்கள்.
- சேமிக்கும் குணத்தைக் கொண்டவர்கள்.
- மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிபளிப்பவர்கள்.
- அழகிய விழிகளைள கொண்டவர்கள்.
- பிறருக்கு உதவும் மனப்போன்மை கொண்டவர்கள்.
- எதற்கும் அஞ்சாதவர்கள்.
கருத்து தெரிவிக்க