இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வரி அடையாள இலக்கம் பெறுவது கட்டாயம், ஆனால் ரூ.50,000 அபராதம் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் வரி அடையாள இலக்கம் (TIN) பெறுவது கட்டாயம் என்ற போதிலும், அதற்கு இணங்காதவர்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கும் சட்டம் தற்போதைக்கு நடைமுறைப்படுத்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அரச வருவாயை அதிகரிக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அது நாட்டு மக்களை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வரிக் கோப்பினைத் திறந்து TIN எண்ணைப் பெறுவது கட்டாயம் என்றாலும், TIN எண்ணைப் பெற்ற மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்பதில்லை என்றும், ஒரு லட்சத்துக்கு மேல் நிகர வருமானம் உள்ளவர்கள் மட்டுமே மாதம் வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

கருத்து தெரிவிக்க