தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங் தென்கிழக்கு துறைமுக நகரமான பூசானுக்கு விஜயம் செய்தபோது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவரான லீ, செவ்வாய்க் கிழமை காலை பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து அவர்களுடன் நடந்து சென்றபோது, அவரது கழுத்தின் இடது பக்கத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.
சாட்சிகளை மேற்கோள் காட்டி, தென் கொரியாவின் செய்தி நிறுவனம் ஒன்று, சந்தேக நபர் ஒரு ஆதரவாளராக நடித்து லீயிடம் கையெழுத்து வாங்கினார் என்றும் பின்னர் 20 முதல் 30 சென்டிமீட்டர் (7.9 – 11.8 அங்குலம்) நீளமுள்ள ஆயுதத்தால் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங்கை அவர் அவரைத் தாக்கினார் என்றும் தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க