பொன்மொழிகள்

சிந்திக்க சில வரிகள்! பசும்பொன்தேவர்

  • யாவரும் வாழ்க என்று சொல்லுங்கள், ஒழிக என்று ஏன் சொல்ல வேண்டும்? நல்லவைகள் வாழ்க என்று சொன்னால் நீங்கள் நினைக்கிற கெட்டவைகள் ஒழியத்தானே செய்யும்.
  • தனியாக இருக்கும் போது சிந்தனையிலும், கூட்டத்தோடு இருக்கும் போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும்.
  • வீரம் என்னும் குணம்தான் எதிரியையும் தன்னை மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும். கோழைத்தனம் அவ்வாறு செய்யாது!
  • சமயம் வரும்போது யானையை எதிர்க்கும் வீரமும் தீரமும், எறும்பு கடிக்கும் போது குமுறாமல் வருடிக் கொடுக்கும் பொறுமை குணமும் அரசுக்கு அமைந்திருக்க வேண்டும்.

கருத்து தெரிவிக்க