- வாழ்க்கை என்ற பள்ளிக்கூடத்தில் நாம் அனைவரும் மாணவர்கள். பிரச்சினைகள் என்பது நம்முடைய பாடத்தின் ஒரு பகுதி. அல்ஜீப்ரா வகுப்பு போல அது மாறிவிடும். ஆனால் நம்முடைய படிப்பனுபவம் வாழ்வின் இறுதி வரை வரும் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
- மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். அந்தத் தவறுகள் அனைத்தையும் செய்வதற்கு உங்களுக்கு ஒரு வாழ்நாள் போதாது.
- வெட்டுதல், உரசுதல், சூடாக்குதல், தகடாகத் தட்டுதல் முறைகளால் தங்கம் பரிசோதிக்கப்படுகிறது. அது போல மனிதன் அவனது செயல், சொல், குணத்தால் வெளிப்படுகிறான்.
- சந்தனம் துண்டு துண்டாக ஆனாலும் அதன் மணம் மாறாது. அது போன்று மேன்மக்கள் குணம் வறுமை வந்தாலும் மாறாது.
கருத்து தெரிவிக்க