வெளிநாட்டு செய்திகள்

சீனா ஆயுதங்களை அணிவகுத்ததால் அமெரிக்கா புதிய ஏவுகணை சோதனை

கடந்த செவ்வாய்க்கிழமையன்று கம்யூனிஸ்ட் அரசின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் போது சீனா தனது மிக சக்திவாய்ந்த ஆயுதங்களை அணிவகுத்து தனது சக்தியை உலகுக்கு காட்டியது.இதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை பசிபிக் பகுதியில் தனது புதிய ஏவுகணையை பரிசோதனை செய்து உள்ளது.

குவாமில் யுஎஸ்எஸ் கேப்ரியல் கிஃபோர்ட்ஸ் கடற்படை ஸ்ட்ரைக் கப்பலில் இருந்து ஏவுகணையை செலுத்தியது இது கடலில் சறுக்கி செல்லும் ஏவுகணையாகும். இது ரேடாரில் கண்டுபிடிக்க கடினமானது. மேலும் எதிரிகளின் பாதுகாப்பைத் தகர்க்க கூடியது.

கடற்படை ஸ்ட்ரைக் ஏவுகணையுடன் அனுப்பிய முதல் அமெரிக்க கடற்படைக் கப்பல் கிஃபோர்ட்ஸ் ஆகும்.பசிபிக் பகுதியில் சீனா தனது ஏவுகணை ஆயுதங்களை அதிகரித்து வருகிறது குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க