உள்நாட்டு செய்திகள்

ஏஎஸ்பி லியனகேயும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார்

கட்டாருக்கான முன்னாள் இலங்கை தூதுவரும், இலங்கை தொழிற்கட்சியின்  தலைவருமான ஏஎஸ்பி லியனகேயும்  வரும் ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதற்காக இன்று தேர்தல்கள் செயலகத்தில் கட்டுப்பணம் செலுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

2017ஆம் ஆண்டு கட்டாருக்கான தூதுவராக நியமிக்கப்பட்ட ஏஎஸ்பி லியனகே, டுபாய் சென்ற யோசித ராஜபக்ச, றோகித ராஜபக்ச ஆகியோரின்  பயணப் பையை தூக்கிச் சென்ற படங்கள் வெளியானதை அடுத்து, பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

2010, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்ட ஏஎஸ்பி லியனகே, 2010 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மூன்றாவது அதிக வாக்குகளைப் பெற்றிருந்தார்.

 

கருத்து தெரிவிக்க