ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இன்று (28) மாலை நடைபெறவுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு (28) அவரது வதிவிடத்தில் நடைபெற்றது. இதன்போது மஹிந்தவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மைத்திரி, மஹிந்தவுக்கிடையிலான சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தலுக்கான கூட்டணி மற்றும் சின்னம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது என தெரியவருகின்றது.
இதன்போது எட்டப்படும் இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே திங்கட்கிழமை 30 நடைபெறும் மத்தியசெயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக சுதந்திரக்கட்சி இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
கருத்து தெரிவிக்க