வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட கலைமன்றங்களுக்கிடையிலான ஆக்கத் திறன் போட்டிகளை வருடாவருடம் நடத்திவருகிறது.
கலை மன்றங்களின் அங்கத்துவம் வகிக்கும் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கும் அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும் ஆக்கத் திறனை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை வழங்கல், திறமைகளைப் பாராட்டுதல் மூலமாக ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்புதல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2019 ஆம் ஆண்டிற்கான ஆக்கத்திறன் போட்டிகளில் மாகாண மட்ட போட்டிகள் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி அரங்கில் கடந்த 21.09.2019 22.09.2019 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
இப்போட்டிகளில் வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் அனுசரணையில் இயங்கும் அகிலாண்டேஸ்வரி நுண்கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கு பற்றி
# வடமோடி கூத்து – சிறியோர் பிரிவு
# வடமோடி கூத்து – பெரியோர் பிரிவு
# தென்மோடி கூத்து – சிறியோர் பிரிவு
# நாடகம் – சாபவிமோட்ஷனம்
அகியவற்றில் அனைத்து பிரிவுகளிலும் முதலாம் இடத்தை தனதாக்கி கொண்டது.
கருத்து தெரிவிக்க